பாடசாலைக் கட்டடம் அவர்களாலேயே மீள்நிர்மாணம் செய்யப்பட்டது
நீதிக்கான மய்யதினால் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு நீதி கிடைத்தது. கொள்ளைலாப கொந்தராத்துகாரர்கினால் தரமற்ற கட்டுமானப் பணிகளால் சிதைவடைந்த பாடசாலைக் கட்டடம் அவர்களாலேயே மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.
நீதிக்கான மய்யம் கடந்த மே மாதம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட தரம் 10ம் பகுதி கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டுமானத்தில் காணப்பட்ட குறைபாட்டினால் அதன் நிலப்பகுதி சிதைவடைந்தது மாணவர் கல்வி சீரழிந்தமை தொடர்பாக ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டது. ஊடகங்களுக்கு பிரசுரமான குறித்த அறிக்கையில் இவ்வாறான கொள்ளைலாப கொந்தராத்து செயற்பாடுகளை கண்டித்ததோடு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிய தொடர்பிலும் தனது காட்டத்தை மய்யம் வெளியிட்டிருந்தது.
குறித்த அறிக்கையினை கருத்தில்கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் MT. நிஸாம் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை வழங்கியிருந்தார். இதனடிப்படையில் சிதைவடைந்த 10 வகுப்புளின் நிலப்பகுதிகள் சீர்செய்யப்பட்டு மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான சூழ்நிலை இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மய்யமானது இவ்வாறு விரைவாக நடவடிக்கை எடுத்த மாகாண கல்விப் பணிப்பாளருக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறது.
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கொந்தராத்துகாரர்கள் பெற்ற அனுபவம் எதிர்காலத்தில் இலாபத்தினை மட்டும் அடிப்படையாக மட்டும் கொண்டு தரமற்ற கட்டுமான பணிகளில் ஈடுபடும் கொந்தராத்துகாரர்களுக்கு சிறந்த பாடமாக அமையுமென மய்யம் கருதுகிறது.
ஷஃபி எச். இஸ்மாயில்
தலைவர்
நீதிக்கான மய்யம்